4.1 C
Scarborough

இன்றைய ராசிபலன் (22.11.2025)- பணவரவு திருப்திகரமாக இருக்கும்..!

Must read

மேஷம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

புதிய வாகனம் வாங்க திட்ட மிடுவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை எடுத்து நற்பெயர் வாங்குவர். பிள்ளைகளிடம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மிதுனம்

புதிய தொழில் துவங்குவீர்கள். வியாபாரத்தில் அதிக விற்பனையை கூட்ட புதிய வகை சலுகைகளை தருவீர்கள். மனைவிவழியில் உதவிகள் உண்டு. வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மாணவர்கள் நற்பெயர் வாங்கி பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கடகம்

தள்ளிப் போனவர்களுக்கு நல்ல விதத்தில் முடியும். விலகிச் சென்ற நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். உங்கள் உறவினர் மற்றும் மனைவிவழி உறவினர்களைக் கூறி சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

சிம்மம்

பழைய வாகனத்தை விற்று விட்டு புதியதாக வாங்குவீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு கடன் கிடைத்து முடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

கன்னி

மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவர். அதற்குண்டான வேலைகளை இன்று ஆரம்பிப்பர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த தம்பதியர் ஒன்று கூடுவார்கள். புதிய தொழில் துவங்குவர். புதுமண தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

துலாம்

புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். படிப்பில் ஆர்வம் பிறக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசினை பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். பாகப்பிரிவினை சுமுகமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

வங்கிக்கடன் உதவி கிடைக்கும். வேலையாட்களால் உதவிகள் உண்டு. காதல் விவகாரத்தில் அவசரம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். இடுப்பு வலி, மூட்டு வலி வந்துபோகும். முன்கோபத்தை தவிர்த்து விடுங்கள். உயர்கல்வியில் வெற்றி உண்டு. நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். கூடுதல் அறை கட்டுவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். கலைத்துறையினருக்கு தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும். வரவேற்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

மகரம்

பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த பிரச்னைகள் குறையும். அக்கம் பக்கத்தினர் தொடர்புகள் நன்றாக இருக்கும். பிள்ளைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தங்கள் வழக்கு சாதகமாகும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைஞர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கட்டளையினை நிறைவேற்றி நற்பெயரைப் பெறுவர். உடலில் மாதவிடாய் பிரச்சினை தீரும். மாணவர்கள் படிப்பில் நன்கு கவனம் செலுத்துவர். இழந்த மரியாதையை மீண்டும் பிடித்து விடுவீர்கள். நிதானமுடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மீனம்

பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். உத்யோகம் சாதகமாக இருக்கும். உங்கள் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதே நேரம் வேலைச்சுமையும் அதிகரிக்கும். சிகிச்சையில் இருப்பவர்கள் பூரண குணம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article