7.8 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 15.11.2025

Must read

மேஷம்

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த சகோதரிகள் ஒன்று கூடுவார்கள். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும். அவசர தேவைக்காக வாங்கிய கடனை அடைப்பீர்கள். மகள், மாப்பிள்ளை மூலம் சௌகரியங்கள் கிடைக்கும். புதிய வீட்டில் குடிபுகுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

வியாபாரத்தில் லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் சுய உதவிக்குழுவில் தலைமை தாங்குவர். குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சில சமயம் தங்கள் சகோதரர் உதவுவார்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

அரசியல்வாதிகளுக்கு ஏற்றம் தரும் நாளாக அமையும். சுமாரான வேலையில் இருப்பவர்கள் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் அமருவார்கள். வியாபாரம் செழிப்படையும். காதலர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கடகம்

வழக்குகள் பணப்பிரச்னை காரணமாக தடைபட்டு இருந்த கட்டிட வேலைகள் மீண்டும் இனிதே தொடங்கும். எந்த ஒரு விசயமானாலும் தம்பதிகள் ஒன்று சேர்ந்து முடிவெடுப்பர்.பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

சிம்மம்

பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள் வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். புதிய தொழில் துவங்குவதற்கு வங்கியில் இருந்து உதவிகள் கிடைக்கும். புதியதொரு வியாபாரம் துவங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்

கன்னி

நண்பர்களாக இருந்தாலும் பண விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். காதல் கசக்கும். வழக்கறிஞர்கள் சாதனை படைப்பர். பெண்களுக்கு நினைத்த வரண் அமையும். உங்கள் சொத்து பிரச்சினை இழுபறிகள் நீங்கி நல்ல முடிவினைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

துலாம்

கொடுக்கல், வாங்கல் கை கொடுக்கும்.புதிய முயற்சிகள் வெற்றி அடையும். தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும். குடும்பத்தில் சுப விசேஷங்களுக்கான காலம் வந்துள்ளது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

விருச்சிகம்

பெண்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் சற்று விட்டுக் கொடுத்து போவது நல்லது. தாயார் உடல்நலம் காரணமாக அலைச்சல், மருத்துவ செலவுகள் வந்து நீங்கும். மகன், மகள் திருமணத்தை தடபுடலாக நடத்துவர். மாணவர்கள் படிப்பில் நன்கு முன்னேறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர் தங்களுக்கு உதவிபுரிவர். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை கை கூடும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

தம்பதிகள் ஒற்றுமை காப்பர். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். சகோதரி வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மீனம்

பயணங்களின் போது கவனம் தேவை. உங்களது நீண்ட கால கனவான வீடு வாங்கும் முயற்சி பலித்துவிடும். மாணவர்கள் முயற்சி பலிக்கும். பங்காளிகளின் ஒற்றுமை கூடும். சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article