16 C
Scarborough

இன்றைய ராசிபலன்- 13.09.2025

Must read

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு சற்றே சவால்கள் இருக்கும். வியாபாரத்தில் சிரமம் உண்டாகும். உடல்நலத்தில் எச்சரிக்கை தேவை. புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். குடும்பத் தலைவிகளின் தேவை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறம் ஊதா

ரிஷபம்

பெண்கள் தங்கள் குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. சுபகாரியத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள். தங்களுடைய அறிவை மற்ற இடங்களிலும் பரப்ப வேற்று மொழியினைக் கற்க துவங்குவீர்கள். கொழுப்பினை குறைப்பதற்கு நொறுக்கு தீணிகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் – சாம்பல்

மிதுனம்

நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு. சுப காரியங்கள் தாமதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமுடன் இருப்பது நல்லது. எதிரிகள் விலகிப் போவர். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர்.

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை

கடகம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இரவு நேர பயணத்தை தவிர்க்கவும். அப்படி அத்தியாவசியமானால், இரு சக்கர வாகனத்தை விட நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது. தொழில் அதிபர்கள் தம்பதிகள் தங்கள் வருவாயினை பெருக்க திட்டமிடுவர்.

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

சிம்மம்

தம்பதிகளிடத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் வரும். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். உத்யோகத்தில் வேலை பளு அதிகம் இருக்கும். கலைஞர்கள் தங்கள் படங்களில் வெற்றி காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம் – நீலம்

கன்னி

சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். பெண்களுக்கு நல்ல வரண் கிட்டும். அரசியல்வாதிகள் மக்களிடம் பேராதரவை பெறுவர். வீட்டு பிராணிகளை வளர்க்க ஆர்வம் கொள்வீர். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உடல் நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

துலாம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்- நீலம்

விருச்சிகம்

நண்பர்களிடம் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பாக சந்தோஷம் உண்டு. வியாபாரம் சீராக இருக்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்யோகம் தாங்கள் விரும்பியபடி திருப்திகரமாக செல்லும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்- நீலம்

தனுசு

பெண்களுக்கு மாதவிடாய் வலி வந்து போகும். மருத்துவ சிகிட்சை தேவைப்படும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். முகத் தோற்றம் பளிச்சிடும். அதிக விற்பனைக்காக வியாபாரத்தை துவங்க புது கிளையை புது இடத்திற்கு கடையை துவங்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

மகரம்

செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசிய தேவையா என உணர்ந்து செலவினை மேற்கொள்ளுங்கள். மணமாகாதவர்களுக்கு எதிர்பார்த்தவாரே துணை தேடி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த ஏற்ற காலம்.

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

கும்பம்

வியாபாரத்தில் சில புதிய வகையான மாற்றம் செய்வீர்கள். கூட்டு சில சமயம் முன்கோபம் வந்து போகும். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணப்பிரச்சினை நீங்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணம் சேரும். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம் -ரோஸ்

மீனம்

ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு நல்ல வரவேற்பு உண்டாகும். மதிப்பு கூடும். தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். நட்பால் ஆதாயம் உண்டு. புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். இரு சக்கர வாகனம் ஓட்டும் போது வேகத்தை குறைப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article