மேஷம்
இன்று நண்பர் உங்களிடம் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வார். குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிசன் கிட்டும். தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்படும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
ரிஷபம்
ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். உறவு சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கலாம். புதிய இடங்களுக்கு பயணம் செய்ய நேரிடும். இரவு நேரத்தில் சிறிய விருந்துகள் அல்லது சந்திப்பு ஏற்படும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் பொலிவும் சுறுசுறுப்பும் மிகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
மிதுனம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். குடும்ப தலைவிகள் சேமிப்பை துவங்குவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் வரும். பயன்படுத்தி கொள்வது தங்களின் புத்திசாலித்தனம். உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கடகம்
இன்று உங்களுக்கு புதியதொரு தெம்பும் உற்சாகமும் அதிகமாக இருக்கும். வேலைகளில் புதிய முயற்சிகளை தொடங்க நல்ல நேரம். தொழிலில் பொறுமையுடனும் உறுதியுடனும் இருப்பது நல்லது. விசா முயற்சிகள் பலிதமாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
சிம்மம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
கன்னி
நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். ஆனால் செலவில் கட்டுப்பாடு அவசியம். ஆரோக்கியம் உறுதியான நிலையில் இருக்கும். வாகனத்தில் பயணம் செய்யும்போது கவனம் அவசியம். சந்தையில் முதலீடு செய்வதற்கு சிறந்த நாள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் தங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும். பணவரவில் பங்கம் இல்லை. புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உழைப்பை மேலதிகாரிகள் பாராட்டுவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
விருச்சிகம்
நீண்டநாள் பணி திட்டங்கள் இன்று தொடங்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. சொத்து தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலத்தில் சிறிய முன்னேற்றம் காணப்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
தனுசு
நண்பர்களுடன் பழைய நினைவுகள் பகிரப்படும். சந்தையில் பொருட்கள் வாங்க நல்ல நாள். காதல் உறவில் நெருக்கம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு தேர்வில் சிறந்த மதிப்பெண் கிடைக்கும். வீட்டில் சிறிய மாற்றங்கள் செய்ய முடியும். உங்கள் பேச்சுத்திறமை மற்றவர்களை கவரும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மகரம்
முந்தைய காலத்தில் தொடங்கிய பணிகள் இன்று நிறைவேறும். குடும்பத்துடன் சிறிய பயணம் ஒன்றுக்கு வெளியிடம் செல்ல ஏற்பாடு செய்யலாம். புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய லாப வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
கும்பம்
நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். மத, ஆன்மீக நிகழ்வுகளில் பங்கேற்கலாம். இன்று உங்களின் மன உறுதி அதிகரிக்கும். நீண்டநாள் நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. பணவரவில் சிறிய உயர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
மீனம்
பண வருவாய் அதிகரிக்கும். பூர்வீக சொத்து பிரச்சினை தங்களுக்கு சாதகமாக கிடைக்கும். புதிய வாகன தொடர்பானவைகளில் நன்மை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுத்து கொண்டிருந்த சில முடிவுகளை இன்று எடுத்து விடுவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா