மேஷம்
பணவரவு நிலை மேம்படும். நண்பர்களுடன் நல்ல தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. பயணத்தில் சந்தோஷம் அதிகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். இன்று உங்களின் திட்டங்கள் வெற்றி பெறும். சுப காரியங்கள் தாமதமாகும். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம். கடன் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
மிதுனம்
நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெரியர்களின் ஆசி கிட்டும். அரசியலில் நாட்டம் கூடும். அலுவலக விசயமாக வெளியூர் பயணம் உண்டு. உங்கள் செயல்கள் பாராட்டப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
கடகம்
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முதலீடு செய்ய வங்கி கடன் கிடைக்கும். குடும்பத் தலைவிகள் தங்கள் தாய் வீட்டு பயணத்தில் சந்தோஷப்படுவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் வேலை மாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
சிம்மம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
கன்னி
பெற்றோரிடம் வாக்குவாதம் வேண்டாம்.சகோதர வகையில் உதவிகள் உண்டு. சுற்றுலா செல்வதற்கு திட்டமிடவீர்கள். பயணத்தில் வெற்றி பெறுவீர்கள்.வீட்டுப் பொருட்கள் வாங்கி வீட்டினை அலங்கரிப்பர். ஆரோக்கியம் மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு உண்டு. பிள்ளை நன்கு படிப்பர். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை
விருச்சிகம்
பயணத்தில் மகிழ்ச்சி உண்டு. உணவு விசயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் அமைதியை காத்தால் சாதகமான நாளாக அமையும். சுகாதாரத்தில் முன்னேற்றம் காணலாம். புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
தனுசு
குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். மனம் அலைபாயும். நிதானம் தேவை. மாணவர்கள் கோப்பைகளை வென்று உற்சாகம் பெறுவர். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிநாட்டு வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
மகரம்
பழைய வீட்டை சீர் செய்வீர்கள். வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். உடல் நலம் சிறக்கும். வாகனம் வாங்க திட்டுமிடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கும்பம்
இன்று உங்கள் முயற்சி வெற்றி பெறும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். எதிர்பாராத சந்திப்பு நிகழும். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். பொருளாதார ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல துணை அமையும். முகம் வசீகரம் அதிகமாகும். குலதெய்வ பிரார்த்தனையை தள்ளி போடுவீர்கள். புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள் வர். வியாபாரம் செழிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை