மேஷம்
புதுமையான யோசனைகள் வெற்றி பெறும்.இன்று குடும்பத்தில் மகிழ்ச்சிஅதிகரிக்கும். வேலைப்பகுதியில் புதுப் பொறுப்புகள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் மதிப்பர். அரசியலில் நாட்டம் கூடும். வழக்கறிஞர்கள் சுபிட்சம் அடைவர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
ரிஷபம்
இன்று மார்கெட்டிங் பிரிவினர் தங்கள் பேச்சு மற்றவர்களை கவர்ந்து அதிக ஆர்டர்கள் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பர். அவர்களிடம் கவனமுடன் பழகுவது நல்லது. வியாபாரிகளின் பெரிய முதலீடுகள் லாபம் தரும். நண்பர்கள் கைக் கொடுப்பர். உடல் நலம் தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
மிதுனம்
ஆன்லைன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். இளைஞர்கள் காதலில் எச்சச்ரிக்கையாக இருப்பது நலம் குடும்பக் கடமைகளை முடிப்பது நல்லது. பிடித்த நபரை சந்திப்பீர்கள். மருத்துவர்கள் செழிப்பர். தொலைபேசி மூலம் நட்பு பலப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கடகம்
மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிறிய பயணங்கள் உண்டாகும். நண்பர்களுடன் சந்திப்பு அமையும். அதில் மகிழ்ச்சி உண்டு.பொருளாதார முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். இன்று இழுபறியாக இருந்த வேலைகள் முடிந்துவிடும். உறவினர்களால் நன்மை உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம்
சிம்மம்
தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கன்னி
நண்பர்கள் கைக் கொடுப்பர். முகம் புதுப்பொலிவு கூடும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். குடும்பத்தில் விவாதம் வந்துப் போகும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கிய நிலை மேம்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
துலாம்
முக்கிய சந்திப்புகள் நடைபெறும்.அது உங்கள் வாழ்வில் திருப்புமுனையாக மாறலாம். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அமைதியான போக்கே உண்டாகும். நண்பர்கள் யாரிடமும் பகைத்துக் கொள்ள வேண்டாம். இதுநாள் வரை பேசாதவர்கள் மீண்டும் பேசுவர்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
விருச்சிகம்
உத்தியோகத்தில் சிறந்த முன்னேற்றம் காணலாம். மாணவர்களுக்கு சிறந்த நாளாக அமையும்.தூர தேச பயணத்தில் நாட்டம் கூடும். அதற்குண்டான முயற்சிகள் இன்று பலிக்கும். பிள்ளைகள் தங்கள் பேச்சினை கேட்பர். உடல் ஆரோக்கியம் சீர்படும். பண வரவு தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
தனுசு
புதிய நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். தம்பதிகளிடைளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். வேலைகள் தள்ளிப் போகும். காதல் கண் சிமிட்டும். உறவினர்கள் வருகை உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
மகரம்
இன்று தங்களுடைய அலைச்சல்கள் வீண்போகாது. உங்களது கடின உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். பயணத்தில் வெற்றி காணலாம். பெற்றோர்களின் உடல் நலம் தேறும். மருத்துவ செலவு குறையும். பார்ட்னரிடம் பொறுமை அவசியம். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை
கும்பம்
காதலர்கள் சிறந்த முடிவுகள் எடுப்பீர்கள். உங்கள் பேச்சு அனைவரையும் கவரும். மன அமைதி நிலவும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பிரிந்த தம்பதிகள் இணைவர். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கடல்நீலம்
மீனம்
உங்கள் உழைப்பின் பலன் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததற்கும் மேலாக லாபம் கிடைக்கும். எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பர். பிரிந்திருந்த தம்பதிகள் இணைவர். யாருக்கும உறுதிமொழி தர வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை