15.4 C
Scarborough

இன்றைய ராசிபலன் – 04.07.2025

Must read

மேஷம்

மார்கெட்டிங் பிரிவில் உள்ளவர்களுக்கு தங்களது சக ஊழியர்களின் ஆதரவுப் பெருகும். அலுவலகத்தில் அமைதி உண்டாகும். பங்கு சந்தையில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வகுப்பில் தங்களுக்கு வைக்கப்படும் டெஸ்ட்களில் நல்ல மதிப்பெண்களை எடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

பொது நல சேவையில் நாட்டம் கூடும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். மெடிட்டேசன் அவசியம் செய்தல் நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மிதுனம்

மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்திச் செய்து கொள்ள பகுதி நேர வேலைக்கு செல்வர். குடும்பத் தலைவிகள் அக்கம் பக்கம் வீட்டாரிடம் இன்முகத்துடன் பழகுவது நல்லது. முடிந்தவரை அவர்களிடம் அதிகமாக பின்னி பிணைய வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

கடகம்

பெற்றோர் உடல் நலனை கவனித்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புதியவர்களின் நட்பால் நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இழந்த பதவி கிடைக்கும். வழக்கில் இழுபறிகள் நீங்கி நல்ல முடிவு ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு இரட்டிப்பாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். எதிர்பார்த்த காரியம் சித்தியாகும். தேகத்தில் ஒருவித புத்துணர்ச்சியை உணர்வீர்கள். பண வரவுகளில் குறையில்லை. பெண்கள் தங்கள் குல தெய்வ திருவிழாக்களில் கலந்து கொள்ள தங்கள் கணவரின் சொந்த ஊருக்கு சென்று வருவர்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

கன்னி

தொழில் சூடு பிடிக்கும். லாபம் கூடும். வெளியூர் பயணம் செல்ல டிக்கெட் புக் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் மனக்கசப்பு உண்டாகும். அவ்வப்போது பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. மனதில் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

துலாம்

பெண்களுக்கு நற்செய்தி கிடைக்கும். காதல் கை கூடும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். மாமியாரை சமையலில் அசத்துவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுண்டு. திருமணத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு நல்லதொரு மாப்பிள்ளை வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

விருச்சிகம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும், அதற்கேற்ப சம்பளமும் அதிகமுண்டு. பொது நல சேவையில் நாட்டம் கூடும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

தனுசு

தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமண நிச்சயர்தார்த்தம் நடக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சில அத்தியாவசிய காரியங்கள் தாமதமாகும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. ஆன்மீக பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சுபிட்சம் காண்பர். யோகாவில் மனம் லயிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

மகரம்

உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பெரியவரின் ஆசியும் அவர்களின் ஆலோசனையும் தங்களுக்கு கிடைக்கும். பெண்களுக்கு இடுப்பு வலி வந்து போகும். உடற்பயிற்சி செய்வது நல்லது. வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்குவீர்கள். தம்பதிகள் விருந்து விழா என கலந்து கொள்வர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கும்பம்

குடும்பத்தில் உள்ளவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனான குல தெய்வப் பிரார்த்தனைகளை முடித்துவிடுவீர்கள். நேர்முகத் தேர்வை முடித்துவிட்டு அந்த வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு இன்று ஒரு முடிவு வெளியாகும். தேகம் பளிச்சிடும்

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

மீனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article