17.2 C
Scarborough

இன்றைய ராசிபலன்-03.08.2025

Must read

மேஷம்

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

ரிஷபம்

இளைஞர்கள் நேர்முக தேர்வில் தேர்வு பெறுவர். கலைஞர்கள் எதிர் பாலினரிடத்தில் எச்சரிக்கைக் கொள்வீர்கள். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மார்கெட்டிங் பிரிவினருக்கு வாடிக்கையாளர் அதிகரிப்பர். காதல் ஜோடிகள் திருமணத் பற்றி முடிவெடுப்பர். மாணவர்கள் திட்டமிட்டும் படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம் – கரும் பச்சை

மிதுனம்

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர். நீண்ட நாட்களாக இருந்த ஒற்றைத் தலைவலி நீங்கும். ஆரோக்கியம் கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.கடன் பைசலாகும். குடும்பப் பிரச்சினை தீரும். மாணவர்கள் தேர்வுக்காக எழுதி பார்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் -கடல் நீலம்

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கோபம் வரும் போது பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும். தம்பதிகளிடையே அன்யோன்யம் மிகும். தம்பதிகள் உறவில் அன்பு கூடும்.கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் நன்கு படிப்பர். தேகம் பொலிவு பெறும்.

அதிர்ஷ்ட நிறம் -ரோஸ்

சிம்மம்

அதிக சம்பளத்திற்காக புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

கன்னி

இளம் பெண்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். மாணவர்களுக்கு கலகலப்பான சூழல் உருவாகும். சகோதர சகோதரிகள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் -வான் நீலம்

துலாம்

புதிய வாகனம் ஒன்றை இன்று பார்த்து முன்பணம் கொடுத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உணவில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அனைத்து வேலைகளும் முடித்து விடுவீர்கள். அலைச்சலால் தலைவலி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

விருச்சிகம்

கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம் – ஊதா

தனுசு

கணவன், மனைவி ஒற்றுமை இருப்பர். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். அலுவலகத்தில் அமைதி நிலவும். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். வியாபாரம் செழிப்புறும், உடல் நலம் தேறும்.

அதிர்ஷ்ட நிறம் – கிரே

மகரம்

வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவியும். நண்பர்களில் ஒரு சிலரே உங்களிடம் உண்மையான அன்புடன் இருப்பார்கள். அவர்களில் ஒருவரே உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து உங்களுடன் அனுசரணையாக இருப்பார். உடல் நலம் தேறிவரும்.

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை

கும்பம்

குடும்பத்தில் குடும்பத் தலைவிகளுக்கு தனி கிடைக்கும். பிடித்த நபரை சந்திப்பீர்கள். அவரிடம் தங்கள் மன்னிப்பினை கோருவீர்கள். பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் -சாம்பல்

மீனம்

உத்யோகத்தில் உள்ளவர்கள் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பர். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். விட்டுக்கொடுப்பது நல்லது. எதிர்பாராத சந்திப்பு மகிழ்ச்சித் தரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குறுகிய தூர பயணம் ஆக்கம் தரும். சொந்தங்கள் அன்பு பாராட்டுவர். ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம் -கிளிப்பச்சை

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article