முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் நெருங்கிய நண்பரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை கல்முனையில் உள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சந்தேக நபர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கடத்தல்கள், கொலைகள் மற்றும் கொள்ளைகள் உள்ளிட்ட தொடர்ச்சியான கடுமையான குற்றங்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணைகள் தொடர்பாக இனிய பாரதி அண்மையில் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.