18.8 C
Scarborough

இந்த மாதம் கனேடியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள அரசாங்கச் சலுகைகள்.

Must read

வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அனைத்து தரப்பு கனேடியர்களுக்கும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அந்தவகையில், இந்த மாதம் தகுதியுள்ள கனடியர்கள் பெறும் சில சலுகைகள் இங்கே தரப்படுகின்றன.

அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, Canada Revenue Agency (CRA) September 19 அன்று கனடா குழந்தை நலத் தொகையைச் செலுத்தும். அத்துடன் ஆண்டுக்கான மொத்தப் வருமானத் தொகை $240 க்கும் குறைவாக உள்ளவர்களுக்கு, மாதாந்த கொடுப்பனவுகளுக்குப் பதிலாக July மாதத்தில் ஒரு மொத்தத் தொகை வழங்கப்படும்.

கனேடியர்களின் சரிசெய்யப்பட்ட குடும்ப நிகர வருமானம் $37,487 க்கும் குறைவாக இருந்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் அதிகபட்சமாக கனடா குழந்தை நலனைப் பெறலாம்.

✔️ ஆறு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் வருடத்திற்கு $7,997 அல்லது மாதத்திற்கு $666.41

✔️ ஆறு முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு வருடத்திற்கு $6,748 அல்லது மாதத்திற்கு $562.33

பயனாளிகள் 18 வயதுக்குட்பட்ட குழந்தையின் பராமரிப்பிற்கு முக்கியமாக வரி நோக்கங்களுக்காக கனேடிய குடியிருப்பாளராக இருப்பது போன்ற சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். சில மாகாணங்களும் பிரதேசங்களும் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகளுக்கு உதவ கூடுதல் நிதி உதவியை வழங்குகின்றன.
ஊனமுற்றோர் வரிச் சலுகைக்கு தகுதியுள்ள குழந்தை உள்ளவர்கள், July 2025 முதல் June 2026 வரையிலான காலத்திற்கு $3,411 அல்லது மாதத்திற்கு $284.25 வரையிலான குழந்தை ஊனமுற்றோர் சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article