7.8 C
Scarborough

இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம் – பலி எண்ணிக்கை 1,003 ஆக உயர்வு!

Must read

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் 3 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா மற்றும் அசே ஆகிய 3 மாகாணங்களில் 14 லட்சம் பேர் பாதிப்பை எதிர்கொண்டு உள்ளனர்.

அரிய நிகழ்வாக மலாக்கா ஜலசந்தியில் ஏற்பட்ட சென்யார் என்ற சூறாவளி புயலால் கனமழை மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1,003 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 218 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 200-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் 581 கல்வி நிலையங்கள் வெள்ள பாதிப்புகளால் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article