8.7 C
Scarborough

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக Brampton இந்துக் கோவிலில் மெழுகுவர்த்திப் பிரார்த்தனை!

Must read

இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் வெள்ளிக்கிழமை இரவு Brampton இல் உள்ள ஒரு இந்து கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை, வடமேற்கு இந்திய நகரமான அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில், லண்டன் சென்ற Boeing 787 விமானத்தில் பயணம் செய்த 241 பயணிகளுக்காக பிரார்த்தனை செய்ய பக்தர்கள் ஆலயத்தில் கூடினர்.

இந்த விபத்தின் விளைவாக நான்கு மருத்துவ மாணவர்கள் உட்பட தரையில் இருந்த நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இதில் விமானத்தில் பயணித்த ஒரே ஒரு கனேடியரான 32 வயதான நிராலி பட்டேல் (Nirali Patel) என்ற பல் மருத்துவரும் உயிரிழந்துள்ளார்.

கோயிலின் முன்னாள் தலைவர் அஷோக் கப்பூர் (Ashok Kapoor) ஆலயத்தின் பல உறுப்பினர்கள் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதனால் பிரார்த்தனை நிகழ்வை நடத்துவது அவசியம் என்று கூறினார். இந்த பிரார்த்தனையின் நோக்கம் இரங்கல் தெரிவிப்பதும், இழப்பைச் சந்திக்கும் குடும்பங்களுக்கு கடவுள் வலிமை அளிக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதும்தான் என்று அவர் கூறினார்.

இந்த விபத்தில் சிக்கிய ஒரு பயணி மட்டும் தீக்காயங்கள் மற்றும் பிற காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார். விஷ்வகுமார் ராஜேஸ் (Viswashkumar Ramesh) என்ற அந்தப்பயணி வெள்ளிக்கிழமை இந்தியாவின் தேசிய ஒளிபரப்பாளரிடம் பேசிய போது தான் உயிருடன் இருப்பதை இன்னும் நம்பவில்லை என்று கூறினார்.

வெள்ளிக்கிழமை, விபத்து நடந்த கட்டிடத்தின் அருகிலுள்ள கூரையின் மேல் தளத்திலிருந்து இருந்து புலனாய்வாளர்கள் கறுப்புப் பெட்டியை மீட்டனர். அதிலிருந்து பதிவுசெய்யப்பட்ட தகவல்களைக் கொண்டு விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும் என உலகமே எதிர் பார்ப்புடன் காத்திருக்கின்றது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article