இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இந்தியாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழல் இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பாதிக்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். “இந்தியா இன்று யாரையும் சார்ந்து இருக்கவில்லை, மாறாக உலகம் இந்தியாவை நோக்கித் திரும்புகிறது” என்று அவர் குறிப்பிட்டார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என்பதற்கான பொருளாதார வரைபடத்தையும் அவர் இதன்போது சமர்ப்பித்தார்

