7.8 C
Scarborough

இந்தியில் பிரபல டி.வி. சீரியல் நடிகையாக திகழ்ந்த நடிகை நூபுர் அலங்கார், ஆன்மீகப் பாதைக்கு திரும்பி இமயமலை குகை, காடுகள் மற்றும் தொலைதூர ஆசிரமங்களில் தங்கி அமைதியான எளிய வாழ்க்கை வாழ்கிறார். இந்தியில் சக்திமான் உட்பட 155-க்கும் மேற்பட்ட டி.வி. சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நூபுர் அலங்கார். இவர் தனது பணத்தை பிஎம்சி வங்கியில் சேமித்து வைத்திருந்தார். முறைகேடுகள் காரணமாக இந்த வங்கி வாரியத்தை ரிசர்வ் வங்கி கடந்த 2019-ம் ஆண்டு கலைத்தது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது அவருக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் இவரது குடும்பத்தில் சில சோக சம்பவங்கள் நடைபெற்றன. தாய் மற்றும் சகோதரி அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதனால் உலக வாழக்கையை அவர் வெறுத்தார். குடும்பத்தைவிட்டு ஆன்மீக பாதைக்கு திரும்ப விரும்பினார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனுமதியுடன் ஆன்மீக வாழ்க்கைக்கு திரும்பினார். சந்தியாச வாழ்க்கையை தொடங்கி தனது பெயரை பீதாம்பர மா என மாற்றிக் கொண்டார். மும்பையை விட்டு வெளியேறி நாடு முழுவதும் பயணம் செய்தார். சுமார் 3 ஆண்டுகளாக இமயமலை குகை, காடுகள் மற்றும் தொலைதூர ஆசிரமங்களில் அவர் தங்கி தியானம் செய்தார். கடும் பனி, எலி கடி, உடல்நிலை பாதிப்பு போன்ற சிரமங்களையும் அவர் தங்கும் இடங்களில் சந்தித்தார். ஆசிரமத்துக்கு வருபவர்கள் அளிக்கும் உடைகளையை அவர் அணிகிறார். தன்னுடன் எப்போதும் 5 செட் உடைகளை மட்டுமே வைத்துக் கொள்கிறார். செலவுக்கு பிறரிடம் யாசகம் பெறுகிறார். அவற்றை கடவுளுக்கும், அவரது குருவுக்கு அளிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ ஆடம்பரம்மின்றி வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன். இயற்கையுடன் இணைந்து வாழ்வது மன அமைதியையும், தெளிவையும் கொடுக்கிறது. யாசகம் பெறுவது மூலம் கர்வம் ஒழிந்துள்ளது. தண்ணீர் கடலுக்கு திரும்புவதுபோல், தெய்வீகத்துடன் கலப்பதுதான் வாழ்வின் நோக்கம்’’ என்கிறார். HinduTmail

Must read

கவுதம் கம்பீர் வந்த பிறகே அவர் யாரை உட்காரவைத்து உட்காரவைத்து மீண்டும் அணியில் எடுக்கிறாரோ அவர்கள் கம்பீருக்கு பாடம் புகட்டுமாறு தங்கள் செயல் திறனை நிரூபித்து வருகின்றனர். நேற்று அப்படி நிரூபித்தவர்கள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், இன்னொருவர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர்.

ஆகவே, உட்கார வைத்து எடுத்தால் நன்றாக ஆடுவார்கள் என்று இதற்கு கம்பீர் சப்பைக் கட்டுக் கட்ட முடியாது. மாறாக, ஏன் அணியை இப்படி நிரந்தரமில்லாத அந்தரங்க நூல் போல் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார் என்பதே கேள்வி. இவையெல்லாம் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கும் வரை தெரியாது, ஒருமுறை தொடர் தோல்விகளைச் சந்திக்கும்போது கம்பீரின் சாயம் வெளுக்கும்.

டி20-யில் அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் ஆகச் சிறந்த பவுலர். 66 போட்டிகளில் 104 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 50 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் இந்திய பவுலர்களில் டி20-யில் குல்தீப் யாதவ் மட்டுமே அர்ஷ்தீப்பை விட நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவர். இன்னொரு கோடரி விழும் வீரர் குல்தீப் யாதவ். இப்படியிருந்தும் அர்ஷ்தீப் சிங் டி20 அணியில் ரெகுலர் என்று கூற முடியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று ஹோபார்ட்டில் அர்ஷ்தீப் சிங் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால் அவரும் ட்ராவிஸ் ஹெட், ஜாஷ் இங்லிஷ் ஆகிய அபாய அதிரடி வீரர்களை சடுதியில் வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பினார். அர்ஷ்திப் முதல் 2 போட்டிகளில் இல்லை.

வேடிக்கை என்னவெனில் அர்ஷ்தீப், வாஷிங்டன், குல்தீப் போன்றோர் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அரிய வாய்ப்புகளிலும் நிரூப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது சில வீரர்கள் கேள்வியின்றி தோல்வி அடைந்தாலும் அணியில் நீடிக்கின்றனர். உதாரணமாக ஷுப்மன் கில். ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல். இதில் அக்சர் படேல் ஏதோ ஒரு விதத்தில் இன்றியமையாதவர் ஆகிவிட்டார்.

ஷுப்மன் கில் சொல்லி சொல்லி தோல்வியடைந்தாலும் அணியில் நீடிப்பார். ஆனால் சஞ்சு சாம்சனை ஒருவழியாக மெல்ல மெல்ல டவுன் ஆர்டரை மாற்றி, அதை இதை மாற்றி ஒழித்தாகிவிட்டது.

அதாவது ஒரு வீரர் அணிக்கு இன்றியமையாதவராக மாறும்போது கம்பீர் அவர் டவுன் ஆர்டரை மாற்றி அவரை ஃபெயில் ஆக்கி கடைசியில் டீமை விட்டுத் தூக்கி விடுவார். இதுதான் கம்பீரின் டெக்னிக். இதுதான் சாம்சனுக்கு நடந்தது. குல்தீப்புக்கு நடந்து கொண்டிருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் அந்த தீய டிசைனின் உள்ளேதான் இருக்கிறார்.

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்றால், பேட்டிங் டெப்த் வேண்டும் என்கிறார்கள். ஏன் ஒரு 5-6 டாப் வீரர்களை உறுதியாகத் தயார் செய்ய முடியவில்லை? இவர்களது இந்த இயலாமைக்கு சிலபல வீரர்கள் பலியாக வேண்டியதாயிருக்கிறது.

நேற்று ஷிவம் துபேவை சொல்லி சொல்லி அடிக்கின்றனர், அவருக்குப் பவுலிங், ஆனால் வாஷிங்டன் சுந்தருக்கு பவுலிங் தரவில்லை. அதாவது சுந்தருக்குப் பவுலிங் கொடுத்து அவர் அதில் சிறப்பாகச் செயல்பட்டால் அவரை பேட்டிங்குக்காக அல்லாமல் பவுலிங்குக்காகவே அணியில் வைத்திருக்க நேரிடும். இதைத் தவிர்ப்பதற்காக அவரை நேற்று பேட்டிங்கில் முன்னால் களமிறக்கினர். அவரும் வெற்றி பெறச் செய்தார்.

ஆனால், அடுத்த போட்டிக்கு வாஷிங்டன் சுந்தரின் இடம் நிச்சயமற்றது. அர்ஷ்தீப்பின் இடமும் அப்படித்தான். ஏன் ஷுப்மன் கில்லையோ, சூரியகுமார் யாதவையோ, திலக் வர்மாவையோ காப்பாற்ற விளிம்பு வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்? ஒரு டாப் 5 வீரர்களைத் தயார் செய்யலாமே. பிரியவன்ஷ் ஆர்யா, சூரியவன்ஷி, பிரப்சிம்ரன் என்று வீரர்களுக்கா பஞ்சம்? ஆனால் ஷுப்மன் கில்லை 3 வடிவ கேப்டனாக்கி விட வேண்டும். ஏன் இந்த அவா? குஜராத் டைட்டன்ஸ் லாபி இல்லை என்று கூற முடியுமா?

கிரெக் சாப்பல் – ராகுல் திராவிட் கூட்டணி அணியில் பேட்டிங் வரிசையில் 3-ம் நிலையில் பரிசோதனையாக மாற்றம் செய்தார்கள், ஆனால் ஒரு மையமான 5 வீரர்களை டாப்பில் மாற்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று பரிசோதனைகள் செய்தனர். ஆனால் இன்றோ தகுதியால் அன்றி வேண்டப்பட்டவரை அணியில் நிரந்தரமாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மற்றவர்களை சுழற்சி முறை என்று கூறிக்கொண்டு அவர்களுக்கு கணிசமான போட்டிகளில் வாய்ப்புக் கொடுக்காமல் விட்டு விட்டு கொடுப்பது என்று போய்க் கொண்டிருக்கிறது. இதனால் வீரர்களின் திறமை அழிக்கப்படுமே தவிர வளராது.

HinduTmail

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article