இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதிக கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களில் 66 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 344 பேர் உயிரிழந்துள்ளதோடு காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரு நாடுகளிலுமேற்பட்ட இந்த வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.