19.9 C
Scarborough

இந்தியா – பங்களாதேஷ் வெள்ளைப்பந்து தொடர் ஒத்திவைப்பு

Must read

இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட வெள்ளைப்பந்து தொடரில் ஆட இருந்தது. இந்த தொடர் அடுத்த மாதம் 17ம் திகதி தொடங்க இருந்தது.

ஆனால் பங்களாதேஷில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்த தொடரை திட்டமிட்ட படி நடத்த முடியாது என பி.சி.சி.ஐ., வங்காளதேச கிரிக்கெட் சபையிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனால் இந்த தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

இருப்பினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ (பி.சி.சி.ஐ). பங்களாதேஷ் கிரிக்கெட் சபையோ இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த தொடர் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி இந்தியா-பங்களாதேஷ் இடையிலான வெள்ளைப்பந்து தொடர் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பி.சி.சி.ஐ. தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article