16.1 C
Scarborough

இந்தியாவுக்கு காலிஸ்தான் தலைவர் கொலையில் தொடர்பில்லை: கனடா ஆணையம்

Must read

காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என கனேடிய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில் கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கொல்லப்பட்டார்.

இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றம்சாட்டினார். ஆனால் இந்தியா அவரது குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்த நிலையில், இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காலிஸ்தான் அமைப்பு தலைவரின் கொலை மற்றும் கனடா தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக விசாரிக்க ஆணையம் ஒன்றை கனடா அரசு அமைத்தது.

இந்த நிலையில், குறித்த ஆணையம் 123 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் வெளிநாட்டு சக்திகளுக்கு தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவுக்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்பில்லை என்பது தெளிவாகியுள்ளது. அதே சமயம், ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதாக தொடர்ந்து சிலர் நாட்டில் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பினர் எனவும், இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article