15.4 C
Scarborough

இந்தியர் கொலைக்கு தூதரகம் வருத்தம் தெரிவிப்பு!

Must read

கனடாவில் இந்தியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கனேடிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவின் தலைநகரான Ottawaவுக்கு அருகிலுள்ள ராக்லேண்ட் என்னுமிடத்தில் நேற்று மதியம் சுமார் 3.00 மணியளவில் இந்தியர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்த விவரங்கள் எதையும் பொலிசார் வெளியிடவில்லை.

இந்நிலையில், கனடாவிலுள்ள இந்திய தூதரகம் சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், Ottawaவுக்கு அருகிலுள்ள ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து ஆழ்ந்த துக்கம் அடைந்துள்ளோம்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் என தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article