தமிழில், லிங்குசாமி இயக்கிய ‘த வாரியர்’, வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி, அடுத்து கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ஜெயம் ரவியின் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்கத்தில் டைகர் ஷெராஃபுடன் அவர் பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

