சனிக்கிழமை Calgary Stampede இல் கலந்து கொண்ட Pierre Poilievre வெள்ளை நிற தொப்பியையும் அணிந்து கொண்டு தன்னை எதிர்காலத்தில் Alberta வின் கிராமப்புறத்திலிருந்து தெரிவு செய்யப்பட இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக உருவகப்படுத்தினார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Ottawa வில் தனது ஆசனத்தை இழந்த Conservative கட்சித் தலைவர் August 18 ஆந் திகதி மத்திய Alberta வின் Battle River-Crowfoot தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இந்நிலையில், குறித்த தொகுதியில் பெரும்பான்மையைப் பெற்ற பின்னர் தனக்காக பதவி விலகிய முன்னாள் Conservative நாடாளுமன்ற உறுப்பினரான Damien Kurek ஐ புகழ்ந்து பேசிய Poilievre இதன்மூலம் தான் இடைத்தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்கு பிரவேசிப்பேன் என்றார்.
மேற்கு கனடாவுக்காக, அதிலும் குறிப்பாக Alberta விற்காக நாடாளுமன்றத்தில் வலுவாக தாம் குரல் கொடுப்பதாக Poilievre மேலும் அங்கு கூறினார். எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்காக, விவசாயிகளுக்காக, குறைந்த வரிகளுக்காக, பரவலாக்கத்திற்காக, வலுவான இராணுவத்திற்காக மற்றும் ஒரு சிறிய சிறந்த கூட்டாட்சி அரசாங்கத்திற்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம், இதனால் நாம் ஒரு பெரிய Alberta வை பெற முடியும் என்று அவர் கூறினார்.
அத்துடன் தான் River-Crowfoot தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டால், மேற்கு கனடாவின் நியாயமான கோரிக்கைகளை விரிவுபடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்ற தளத்தைப் பயன்படுத்துவேன் எனவும் கூறினார்.
இதனிடையே வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பிரதமர் உட்பட NDP இடைக்காலத் தலைவர் Don Davies மற்றும் Ontario மாகாண முதல்வர் Doug Ford என பல தலைவர்களும் Stampede நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.