14.6 C
Scarborough

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்

Must read

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.

உபாதை உள்ளிட்ட காரணங்களால் நீண்ட காலமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து வந்த அவர், தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பி இருக்கிறார்.

{ப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 2ஆம் திகதி பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை இன்று (26) அறிவித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த டெஸ்ட் அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜொஃப்ரா ஆர்ச்சர் இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய அவர், அதன்பின் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டதிட்ட 4 ஆண்டுகளுக்கு மேல் டெஸ்ட் அணியில் இடம்பெறாமல் இருந்தார்.

ஒருநாள் தொடருக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு

இதையடுத்து சமீபத்தில் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள அவர் இங்கிலாந்து ஒருநாள், T20I அணிகளில் இடம்பிடித்ததுடன் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார்.

30 வயதான ஆர்ச்சர் இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடந்த வாரம் இங்கிலாந்தில் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடினார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். அவரது வருகை இங்கிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக, கிறிஸ் வோக்ஸுடன் தற்போது ஜொஃப்ரா ஆர்ச்சரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு துறையை வழிநடத்தவுள்ளார். இதுதவிர்த்து இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமுல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article