13.6 C
Scarborough

இங்கிலாந்தில் குடியேற இன்று முதல் புதிய விசா விதிகள் அறிமுகம்!

Must read

இன்று முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களும் கடுமையான விதிகளை எதிர்கொள்ள நேரிடும்.

பட்டப்படிப்புக்கு பிந்தைய முதுநிலை படிப்புகளுக்கான காலம் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர் நிரந்தர குடியுரிமைக்கான கால அவகாசத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீடிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பணி விசா வைத்திருப்பவர் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆண்டு இறுதிக்குள் ஆங்கில மொழித் தகுதியை கடுமையாக்க உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article