3.9 C
Scarborough

 ஆஸ்திரேலிய தாக்குதல்; பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும் மகனும் குற்றவாளிகள்!

Must read

ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக அதிகரித்துள்ளது. யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது, பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை – மகன் என்பது தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான சிட்னி அருகே, சுற்றுலா தளமான பாண்டை கடற்கரை உள்ளது. அங்கு நேற்று முன்தினம் யூத சமூகத்தினரின் ஹனுக்கா பண்டிகையின் தொடக்க விழாவுக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இருவர், பெரிய துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்துள்ளது.

இதுதவிர, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை பயங்கரவாத தாக்குதல் என்று ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். மற்றொருவரை பொதுமக்களே தாக்கி மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் தாக்குதல் நடத்தியவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த நவீத் அக்ரம், 50, மற்றும் அவரது மகன் சஜித் அக்ரம், 24, என்பது தெரியவந்துள்ளது. இதில் பிடிபட்ட சஜித் அக்ரம், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் கூறியதாவது:

இருவரும் தந்தை – மகன் ஆவர். அவர்கள் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களது வாகனத்தில் ஐ.எஸ்., என்ற பயங்கரவாத அமைப்பின் கொடி மற்றும் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் ஒரு பகுதியாக சிட்னி புறநகர் பகுதிகளான போனிரிக் மற்றும் கேம்ப்சி பகுதிகளில் இரவு முழுதும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஆறு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article