9.5 C
Scarborough

ஆஸ்திரேலிய இளம்பெண் கொலை வழக்கு; இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டு சிறை

Must read

ஆஸ்திரேலியாவில், 2018-ம் ஆண்டு இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள வான்கெட்டி கடற்கரையில் டோயா கார்டிங்லி, 24, என்ற இளம்பெண், 2018ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், மருத்துவ ஊழியராக பணியாற்றி வந்த ராஜ்வீந்தர் சிங் என்ற இந்திய வம்சாவளிக்கு தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

ஆஸ்திரேலியாவில் மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்த ராஜ்வீந்தர் சிங், இந்த சம்பவத்திற்கு பின், இந்தியா தப்பியோடினார். ஆஸ்திரேலிய போலீசார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் நாடு கடத்தப்பட்டார்.

அந்நாட்டின் கெய்ர்ன்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் ராஜ்வீந்தர் சிங் மீதான கொலை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. அவருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article