இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
அந்த தொடரில் இந்திய அணியை ரோஹித் சர்மா அணித்தலைவராக வழிநடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், அணித்தலைவர் ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவராக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்தியா – அவுஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கும் முன்பு இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது