14.6 C
Scarborough

ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது கூகுள் அலுவலகம்!

Must read

ஆந்திராவில் 143 ஏக்கர் பரப்பளவில் கூகுள் நிறுவன அலுவலகம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் அனந்தவரம்-நெக்கள்ளு சாலையில் அலுவலகத்தை நிறுவ கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக, இ-8 சாலையில் சர்வே எண் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய நிலப்பரப்பில் சர்வே நடைபெற்றது. இதில் 143 ஏக்கர் நிலம் கூகுள் நிறுவனத்துக்கு வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலை கூகுள் நிறுவன அதிகாரிகள், ஆந்திர அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தங்களின் ஒப்புதலை தெரிவித்துள்ளனர்.

விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவை இந்த இடத்துக்கு அருகில் வர உள்ளதால், ஆந்திர அரசு வழங்குவதாக தெரிவித்த நிலத்தை பார்த்தவுடன் கூகுள் நிறுவன அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். விரைவில் இங்கு இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article