பிரபாகரனின் உப்பு, வடக்கு உப்பு மற்றும் தெற்கு உப்பு என நாட்டில் தற்போது உப்புகள் இல்லை. இலங்கை உப்பே உள்ளது எனவும், எனவே, உப்பை வைத்தும் அரசியல் நடத்த முற்பட வேண்டாம்.” – எனவும் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
‘ஆணையிறவு உப்பளத்தில் போராட்டம் நடத்தினார்கள். அர்ச்சுனாவும் குழப்பம் ஏற்படுத்தினார். வடக்கிலுள்ள உப்பை தெற்குக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கூறினார்.
உங்களுக்கு வடக்கு உப்பு, தெற்கு உப்பு என இருந்திருந்தால் – அந்த கதையை அந்த காலத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். தற்போது அவ்வாறு இல்லை. முழு நாட்டையும் ஐக்கியப்படுத்தியுள்ளோம்.” எனவும் அர்ச்சுனாவை நோக்கி அமைச்சர் குறிப்பிட்டார்.
பிரபாகரனின் உப்பு என்றெல்லாம் அந்த காலத்தில் உருவாக்கிக்கொண்டீர்கள். அவை தற்போது இல்லை. அர்ச்சுனா நீங்கள் குழப்பமடைய வேண்டாம். ஆணையிறவுக்கு சென்றால் அங்குள்ள மக்கள் உங்களை தாக்குவார்கள். தற்போது உப்பை வைத்தும் அரசியல் நடத்துகின்றனர். ” – எனவும் அமைவ்வர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பதிலளித்த அர்ச்சுனா எம்.பி.,
‘ வடக்கு உப்பு, தெற்கு உப்பு என நான் கூறவில்லை. நான் தெரிவிக்காத கருத்துகளை அமைச்சர் இங்கு வெளியிட்டுள்ளார்.
மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை வேலையை விட்டு அகற்ற வேண்டாம் என்றே கூறி இருந்தேன்.” – என்று குறிப்பிட்டார்.