ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசாங்கம் பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்கா தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.