தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
சிறைச்சாலை மருத்துவமனையில் விசேட சிகிச்சை கிடைக்காததை மருத்துவ தரப்பு சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை விக்ரமசிங்க தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக நேற்று சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் அவசர சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.