6.8 C
Scarborough

அளவுக்கு அதிக கடன்சுமையால் வன்னியில் பெண்கள் உயிர்மாய்ப்பு

Must read

கடன்தொல்லை காரணமாக, வன்னியில் பெண்கள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பது அதிகரித்துள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் அரியாலையிலுள்ள வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச் சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

நாட்டுக்கு கூடுதலான வருவாய் ஈட்டித்தருபவர்களாக பெண்கள் காணப்பட்ட போதிலும், சில மாவட்டங்களில் பெண்களின் வாழ்க்கை நிலை மிகவும் பின்னடைவாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக வன்னி மாவட்டத்தில் பெண்கள் பெரும் துன்பங்களை எதிர்கொள்கின்றனர். கடன்கள் காரணமாக உயிர்மாய்க்கும் பெண்களின் எண்ணிக்கை வன்னியில் அதிகளவில் உள்ளது.

இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் இயலுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். கடந்த வருடம் 3 ஆயிரத்து 600 இற்கும் மேற்பட்ட பத்து வயதுக்கும் குறைவான சிறுவர்கள் இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று சிறுவர் அதிகாரசபை கூறியுள்ளது.

பதிவுசெய்யப்பட்ட எண்ணிக்கையையும் விட அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கச் சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. ஏனெனில், பலர் பல்வேறு காரணங்களுக்காக முறைப்பாடுகளை வழங்காமல் விட்டிருக்கலாம் – என அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article