கனடாவின் அல்பர்ட்டாவின் சஸ்காடூனில் நடந்த தொழில்துறை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அல்பெர்டா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது.
இந்த விபத்து, நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வெப்ஸ்டர் வீதியில் உள்ள ஒரு கட்டிட பணிக்கழகத்தில் கிரேன் ஒன்று இடிந்து விழுந்ததனால் ஏற்பட்டது.
சம்பவத்தின் போது, இரு தொழிலாளர்கள் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போர்ட் சாஸ்காச்சுவான் (Fort Saskatchewan) பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாகவும், அந்த நபரின் குடும்பத்தினர் தகவலறிந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
37 வயதான மற்றொரு தொழிலாளரின் நிலைமை குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியிடப்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக மாகாண தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரமான சம்பவம், தொழிலாளர் பாதுகாப்பு நடைமுறைகள் மீதான கவனத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியுள்ளது.