Pierre Poilievre நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் Damien Kurek இந்த மாத தொடங்கத்தில் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது வெற்றிடத்தை மீள் நிர்புவதற்கு ஏதுவாக Alberta வில் Aug. 18 ஆந் திகதி பிரதமர் Mark Carney இடைத் தேர்தலை அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு திரும்புவதற்கு மிகவும் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாக கிராமப்புற Alberta வை Poilievre தேர்ந்தெடுத்திருந்தாலும், Alberta தொகுதியும் Conservative தலைவருக்கு ஆபத்தான பிரதேசமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் Conservative களுக்கு இத்தொகுதியில் 82 சதவீதத்திற்கும் அதிகமான ஆதரவு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிவினைவாத உணர்வு அதிகரித்து வரும் Alberta வில் அந்த மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து சென்று தனி நாடாக மாற வேண்டுமென்ற கோரிக்கை முன்னிலைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், முன்னாள் Conservative அமைச்சரவை அமைச்சர் Stockwell Day பொது வாக்கெடுப்பு ஒரு நல்ல யோசனை என்று தான் கருதுவதாகக் கூறியுள்ளார்.
தனது சமீபத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள், Alberta மாகாணத்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் கனடாவை விட்டு வெளியேறினால் தங்கள் மாகாணம் சிறப்பாக இருக்கும் என்று நம்புவதாகவும், பதிலளித்தவர்களில் 29 சதவீதம் பேர் பொது வாக்கெடுப்பில் பிரிந்து செல்வதற்கு விரும்புவதாகவும் Brown கூறினார். இதன் விளைவாக, Poilievre இவற்றைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க விரும்பினாலும், பிரிவினைவாதிகள் அவரை அந்த உரையாடலில் ஈடுபடுத்தவே விரும்புவார்கள், அத்துடன் அவரது எதிரிகளும் அந்த உரையாடலில் அவரை ஈடுபடுத்த விரும்புவார்கள் என்று அவர் கூறினார்.
இதனிடையே பிரிவினைவாதத்தை எதிர்பதாக கூறிய Poilievre ஆல்பர்ட்டானியர்கள் ஒன்றுபட்ட கனடாவின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதற்கு தகுதியானவர்கள், மேலும் இந்த நாட்டிற்கு அவர்கள் அளித்த மகத்தான பங்களிப்பிற்காக அவர்கள் கௌரவிக்கப்படுவதற்கு தகுதியானவர்கள், அதற்காக நான் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருப்பேன் என்றும் அவர் கூறினார்.
பிரிவினைவாதக் கட்சிகளின் வேட்பாளர்கள், இடைத்தேர்தலில் Poilievre வுக்கு எதிராக போட்டியிடுவார்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. Conservative தலைவர் ஒருவர் செயல்படுவதற்கு இது ஓர் ஆபத்தான பிரதேசம் என்று Teneycke கூறினார். இங்கு போட்டியிடவுள்ள Liberal வேட்பாளர் எரிசக்தி துறையில் பணிபுரியும் பொறியாளரான Darcy Spady என Liberal கட்சி தெரிவித்துள்ளது.