யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வயல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்திலிருந்த சித்தங்கேணி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வட்டுக்கோட்டை பகுதிக்கு அண்மித்த பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாகவும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.