சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் டெவி குஸ்டினா டோபிங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று திங்கட்கிழமை (01) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில், சுகாதார துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தனது பாராட்டுகளை இந்தோனேசிய தூதுவர் தெரிவித்ததோடு, மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதற்காக தற்போதைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களை வலுப்படுத்த இந்தோனேசிய அரசாங்கம் ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார் .
இந்த சந்திப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கையில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தின் மூன்றாம் செயலாளர் ஷீலா அனந்தா உல்லி ஆகியோரும் கலந்து கொண்டனர்.