அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளின் நிலை மற்றும் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் Mark Carney இன்று தனது அமைச்சரவையுடன் மெய்நிகர் வழியாக பிற்பகல் 2 மணிக்கு மணிக்கு சந்திக்கவுள்ளார்.
அதேவேளை, கனடா-அமெரிக்க வர்த்தகத்திற்கு பொறுப்பான அமைச்சர் Dominic LeBlanc இன்று Washington இல் அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்துகிறார்.
ஜனாதிபதி Donald Trump ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், அமெரிக்காவுடனான கனடாவின் பேச்சுவார்த்தைகள் தீவிர கட்டத்தில் இருப்பதாக திங்களன்று பிரதமர் Carney கூறியுள்ள நிலையிலும், August 1 ஆம் திகதி வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான தனது காலக்கெடுவிற்கு முன்னதாக கனடாவிற்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படவில்லை என்று Trump கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறியுள்ள நிலையிலும் கனேடியப் பிரதமரின் இந்தச் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
Gaza பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான மனிதாபிமான நிதியில் 30 மில்லியன் டொலர்களையும், பாலஸ்தீன அதிகாரசபைக்கான சீர்திருத்தம் மற்றும் திறன் மேம்பாட்டை விரைவுபடுத்த 10 மில்லியன் டொலர்களையும் சேர்ப்பதாக அரசாங்கம் திங்களன்று அறிவித்ததை அடுத்து, மத்திய கிழக்கின் நிலைமை குறித்து அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது