கனடா பொருட்கள் மற்றும் சேவை வர்த்தகத்தில் $19.5 பில்லியன் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது, இது முதல் காலாண்டில் வெறும் $800 மில்லியனாக இருந்தது என்று Statistics Canada வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் கனடா ஏற்றுமதி செய்வதை விட அதிகமான பொருட்களை இறக்குமதி செய்கிறது என்பதாகும்.
கனேடியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் காரணமாக ஏற்றுமதிகள் குறைந்தன, மேலும் கனேடிய டொலர் அதன் தெற்குப் பகுதியுடனான இடைவெளியை ஓரளவு குறைத்துள்ளதாக Statistics Caanada அதன் இரண்டாவது காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் நடுவில் கனடா தனது முக்கிய வர்த்தக கூட்டாளிக்கு கணிசமான அளவு குறைவான பொருட்களை ஏற்றுமதி செய்வதனாலேயே வர்த்தக பற்றாக்குறை பெரிதாகி வருகின்றது. இது ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனடா ஒரு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு அதாவது கனேடியர்கள் ஓர் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்கள், கனேடிய வணிகங்கள் குறைவான ஏற்றுமதியை பதிவு செய்தால், உற்பத்தியாளர்களுக்கு அதே எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் தேவையில்லை இதன் விளைவாகவே வேலையின்மை பிரச்சினை கனடாவில் அதிகரிக்கின்றது.
அமெரிக்காவுடனான அதன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, Trump இன் வரிகளின் விளைவுகளிலிருந்து கனடா பெருமளவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்கவின் வேறு எந்த வர்த்தக கூட்டாளியை விடவும் கனடா சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டுள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.