17.5 C
Scarborough

அமெரிக்க-ரஷ்ய மோதல் தொடங்கியுள்ளதா

Must read

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியானது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.

இதனிடையே, 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் உக்ரைன் ரஷியா போர் விடயத்தில் அவர் தலையிட்டுள்ளார். ரஷியா மீதான கோபத்தில் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளார். மேலும், 50 நாட்களுக்குள் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் ரஷியாவின் முன்னாள் தலைவர் டிமிட்ரி வெளியிட்ட பதிவில், ரஷியா ஒன்றும் இஸ்ரேலோ. ஈரானோ அல்ல. ஒவ்வொரு காலக்கெடுவும், போருக்கான பாதை. இந்தியா, ரஷியாவின் பொருளாதாரங்கள் குறித்த ட்ரம்ப்பின் பேச்சால் அவர் ஆபத்தான எல்லைக்குள் நுழைகிறார் என தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரியின் மிரட்டலை தொடர்ந்து ரஷியா நோக்கி அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை அனுப்பி ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவின் முட்டாள்தனமான ஆத்திரமூட்டும் மிரட்டல்கள் வெரும் மிரட்டல்களாக மட்டும் இல்லையென்றால் அதற்கு பதிலடியாக அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களை ரஷியா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தைகள் மிகவும் முக்கியம். அந்த வார்த்தைகள் சில சமயங்களில் காரணமற்ற விளைவுகளை ஏற்படுத்தலாம். டிமிட்ரியின் தற்போதைய வார்த்தைகள் அதுபோன்ற விளைவுகளை ஏற்படுத்ததாது என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஷியாவை நோக்கி நிலைநிறுத்த அணு ஆயுதம் தாங்கிய 2 அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள் புறப்பட்டுள்ளன. அதேவேளை, ட்ரம்ப்பின் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தல் தொடர்பான மிரட்டலுக்கு ரஷியாவும் பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடர்பாக ரஷிய எம்.பி. விக்டர் வடலொட்ஸ்கெ கூறுகையில், உலக கடல்களில் அணு ஆயுதம் தாங்கிய அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை விட அணு ஆயுதம் தாங்கிய ரஷிய நீர்மூழ்கி கப்பல்கள் அதிகம். டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டு ரஷியா நோக்கி நிலைநிறுத்த உத்தரவிட்ட பகுதி அவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்ட அணு ஆயுதம் தாங்கிய 2 நீர்மூழ்கி கப்பல்களும் எங்கு உள்ளன, அதன் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு தெரியும். ஆகையால், டிரம்ப்பின் கருத்துக்கு ரஷியாவிடமிருந்து அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கி கப்பல்கள் நிலைநிறுத்தல் ரீதியில் பதிலடி கொடுக்கும் அவசியம் எமக்கில்லை என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article