ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாக சவுதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா , ஜொ்மனி, பிரான்ஸ், கனடா என 32 நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை காப்பதே தனது நோக்கம் என்று நேட்டோ தெரிவித்துள்ளது.
நேட்டோவில் இணைய உக்ரைன் முடிவு செய்த நிலையில், இதனால் தமக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதிய ரஷ்யா, உக்ரைன் மீது கடந்த 2022ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்தப் போர் தொடங்கி 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், அந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர, சவூதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.