அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து (New England) மாநிலங்களில் உள்ள சுற்றுலா நகரங்கள், குறிப்பாக மெயின் (Maine) மற்றும் வெர்மாண்ட் (Vermont) போன்ற இடங்கள், கனடிய சுற்றுலாப் பயணிகள் குறைவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டைவிட கனடியர் வருகை குறைவாக இருப்பதாக, யோர்க் பீச் பீர் நிறுவனத்தின் (York Beach Beer Company) உரிமையாளர் டேவிட் ரோவ்லன் (David Rowland) தெரிவித்துள்ளார்.
மெயின் மாநிலத்தில் மட்டுமே பெப்ரவரி முதல் மே மாதம் வரை வருகை தந்த கனடியர்கள் எண்ணிக்கை 27% குறைந்துள்ளது.
அதேபோல், வெர்மாண்ட்-ல் ஹோட்டல் முன்பதிவுகள் 45% குறைந்துள்ளன. நியூயோர்க் நகரத்தில் (New York City) கனடியர் முன்பதிவுகள் 45% குறைந்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வெளியிட்ட கருத்துகள், கனடா பொருட்களுக்கு விதித்த வரிகள், எல்லைப் பகுதிகளில் காணப்படும் தாமதங்கள் என்பனவே இதற்கு காரணமாகும்.