ஒட்டுமொத்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் 3% வருமான வரி விதிக்கும் வகையில் கனடா (Canada) கொண்டுவந்த டிஜிட்டல் சேவைகள் வரி (Digital Services Tax) இன்று அமுலுக்கு வர இருந்த நிலையில், பிரதமர் மார்க் கார்னி (Prime Minister Mark Carney) தலைமையிலான கனடா அரசாங்கம் அதனை இரத்து செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் தொடங்கிய வர்த்தக பேச்சுவார்த்தை தடைபடக் கூடாது என்ற நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்ப், இந்த வரி விதிப்பு “அமெரிக்காவுக்கு எதிரான நேரடி தாக்குதல்” என்று சாட்டியதுடன், Canadian கனடா உற்பத்திப் பொருட்களுக்கு புதிய வரிகள் (tariffs) விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.
Amazon, Meta, Google, Apple உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் மீது வரி தாக்கம் செலுத்தவிருந்த நிலையில், வரியை வாபஸ் பெறும் சட்டம்த்தை நிதியமைச்சர் ப்ரான்சுவா-பிலிப் சம்பெய்ன் (Francois-Philippe Champagne) விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளார்.
G7 மாநாட்டில் இடம்பெற்ற ட்ரம்ப் – கார்ன சந்திப்பில் 30 நாட்களில் புதிய பொருளாதார ஒப்பந்தத்தை கைசாத்தி தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.