17.8 C
Scarborough

அமெரிக்க-தென்கொரிய ராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுத்த கிம் ஜோங் உன்

Must read

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் மேற்பார்வையில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக வட கொரிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த ஆயுதங்கள் “சிறந்த போர் திறன்” கொண்டவை என்றும்,“தனித்துவமான தொழில்நுட்பத்தைப்” பயன்படுத்தியதாகவும் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ட்ரோன்கள் மற்றும் வான்வழி ஏவுகணைகள் உட்பட “இரண்டு வகையான ஏவுகணைகளின் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டவை எனவும் பல்வேறு வான் இலக்குகளை அழிக்க மிகவும் பொருத்தமானவை என்பதை நிரூபித்துள்ளன” என்று கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடுகளைப் பிரிக்கும் இராணுவமயமாக்கப்படாத மண்டலத்தை கடந்த செவ்வாய்க்கிழமை(DMZ) வட கொரிய வீரர்கள் தாண்டிய நிலையில் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை தென் கொரியா உறுதிப்படுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

இதேநேரம் வடக்கு மற்றும் தெற்கு பகுதி இடையேயான பெரிதும் பாதுகாக்கப்பட்ட எல்லையை சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் தாண்டியதாக ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளை தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவும் அமெரிக்காவும் கடந்த திங்கள்கிழமை முதல் இப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், திங்களன்று வொஷிங்டனில் நடைபெறும் உச்சிமாநாட்டில் தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங்கை சந்திக்க உள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தென் கொரிய அதிபர், கொரியாக்களுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரச்சாரம் செய்திருந்தார்.

இருப்பினும், கிம்மின் சகோதரி, லீயின் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமரச முயற்சிகளை நிராகரித்துள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் கிம் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு இராணுவப் பயிற்சிகளைக் கண்டித்து, அவற்றை “மிகவும் விரோதமான மற்றும் மோதல் நிறைந்தவை” என்று தெரிவித்தார்.

வட கொரியத் தலைவர் நாட்டின் அணு ஆயுதங்களை அதிகரிக்கும் தனது இலக்கை விரைவுபடுத்துவதாக சபதம் செய்தார்.

ஜனவரியில், வட கொரியா ஒரு ஹைப்பர்சோனிக் போர்முனையுடன் கூடிய புதிய இடைநிலை, நீண்ட தூர ஏவுகணையை ஏவுவதாகக் கூறியது, இது “பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளர்களையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article