அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் நீண்ட நேரம் உரையாடியதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இது ஒரு நல்ல உரையாடல்,” என கார்னி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம், புவிசார் அரசியல், தொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி விரிவாகப் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக ரீதியான பிரச்சினைகளுக்கு எப்போது இணக்கப்பாடு எட்டப்படும் என்ற கால வரையறைகளை வெளிப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.
பொதுவாக கனடாவுக்கு உலகிலேயே சிறந்த வர்த்தக ஒப்பந்தம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கனடிய பிரதிநிதிகள் குழுவொன்று அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வொஷிங்டனில் இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.