22.5 C
Scarborough

அமெரிக்க உளவுத்துறையின் தலைவராக துளசி

Must read

அமெரிக்க உளவுத்துறையின் தலைவராக துளசி கப்பார்ட்டு  அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில், பதவியேற்று கொண்டார். ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்ட்டுக்கு, அமெரிக்க சட்டமா அதிபர் பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

இதுபற்றிய வீடியோ ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் வெளியிட்ட செய்தியில்,

அமெரிக்க உளவுத்துறையின் தலைவராக துளசி கப்பார்ட்டு உறுதி செய்யப்பட்டு இருக்கிறார் என கூறினார். அவர் நம்முடன் பணியில் இணைவார். இதற்கான பதவியேற்பு நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெறும் என்றார்.

இதற்கான ஒப்புதலை குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர். ட்ரம்பின் இந்த நியமனத்திற்கு அவர்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றனர். ஜனாதிபதி ட்ரம்பின் நியமனம் பற்றிய அறிவிப்புக்கு பின்னர், அமைச்சரவையும் அதனை விரைவாக உறுதி செய்து வருகிறது என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article