ட்ரம்பின் வரி விதிப்புகள் உலக நாடுகள் பலவற்றை கவலைக்குள்ளாக்கியிருந்த நிலையில், அமெரிக்காவை திருப்பி அடிப்பது என பல நாடுகள் அதிரடியாக முடிவெடுத்துள்ளன.
அவ்வகையில், கனடாவும், கனடா மீது ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முடிவொன்ற எடுத்துள்ளது.
ஆம், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் சில வாகனங்களுக்கு 25 சதவிகித வரி விதிக்கப்படும் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இது அமெரிக்காவுக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் வகையிலான முடிவு என்பதால், இரு நாடுகளுக்குமிடையில் அது பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.