கனடாவின் Digital சேவை வரியை கைவிடுவதற்கான தனது நடவடிக்கை அமெரிக்காவுடனான பரந்த வர்த்தக பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகும் என்று பிரதமர் Mark Carney திங்களன்று தெரிவித்தார். இது ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகும் என்று Carney நாடாளுமன்ற மலையில் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆனால் Washington வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் Karoline Leavitt கூறும் போது, Carney, ஜனாதிபதி Trump மற்றும் அமெரிக்காவிற்கு அடிபணிந்தார் என்று கூறினார். மேலும், அமெரிக்காவில் உள்ள எங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த வரியை அமுல்படுத்த கனடா சபதம் செய்ததும் தவறு என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை பிரதமரிடம் தெளிவாகத் தெரிவித்தார், அத்துடன் பிரதமர் நேற்று இரவு ஜனாதிபதியை அழைத்து, தமது வரியை கைவிடுவதாக ஜனாதிபதிக்குத் தெரிவித்தார். இது எமது தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், உள்நாட்டில் உள்ள எமது அமெரிக்க தொழிலாளர்களுக்கும் கிடைத்த பெரிய வெற்றியாகும் என்றும் Leavitt கூறினார்.
கனடாவின் நிதி அமைச்சர் Francois-Philippe Champagne மற்றும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc மற்றும் Trump நிர்வாகத்தில் உள்ள அவர்களது சகாக்களுக்கும் இடையே அழைப்புகள் பரிமாறப்பட்டன. கனடா வரியை இரத்துச் செய்வதாகத் தெரிவிக்க Carney, Trump இற்கு அழைப்பை ஏற்படுத்திய போது ஞாயிற்றுக்கிழமை இரவு விவாதங்கள் உச்சக்கட்டத்தை அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த வரியானது Amazon, Google, Meta, Uber மற்றும் Airbnb உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கனேடிய பயனர்களிடமிருந்து வரும் வருவாயில் மூன்று சதவீத வரியை விதிப்பதன் மூலம் பாதித்திருக்கும். முதல் கட்டணம் – 2022 க்கு பின்னோக்கிச் செல்லத்தக்கது. இது அமெரிக்க நிறுவனங்களுக்கு மொத்தமாக 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவை ஏற்படுத்தியிருக்கும்.
பணம் செலுத்திய நிறுவனங்கள் இப்போது அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது, அடுத்த மாதத்தில் வரவிருக்கும் காலாண்டு அறிக்கைகளில் பணம் செலுத்துவதற்கு எவ்வாறு கணக்கு வைப்பது என்று யோசித்து வருகின்றன.
எல்லையின் இருபுறமும் உள்ள வணிகக் குழுக்கள் வரியை நீக்குவதற்கான நடவடிக்கைக்காக கனேடிய அரசாங்கத்தைப் பாராட்டியுள்ள அதேநேரம், விமர்சகர்கள் கனடா அமெரிக்காவிற்கு சரணடைவதாகவும் குற்றம் சாட்டினர்.