வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில் கனடா நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தயங்குகின்றமை புள்ளி விபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. அதேவேளை அமெரிக்கர்களும் கனடாவிற்கு பயணம் செய்வது குறைந்து வருவதாகத் சொல்லப்படுகிறது.
ஏப்ரல் மாதம் வரையிலான மூன்று மாதங்களில் அமெரிக்க குடியிருப்பாளர்களின் கனடாவுக்கான பயணங்கள் குறைந்துள்ளதாக கனடா புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.2024 ஆம் ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது பயணங்கள் 8.9 சதவீதம் குறைந்துள்ளன. கனடாவில் பயணக் கப்பல்களில் இருந்து இறங்கும் அமெரிக்கர்களும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 31.5 சதவீதம் குறைந்துள்ளனர்.
அதே நேரத்தில், அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பும் கனேடியர்களின் எண்ணிக்கை முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறைந்துள்ளது.
கனடா நாட்டினர் வெளிநாட்டிலிருந்து திரும்பும் எண்ணிக்கை 18.9 சதவீதம் குறைந்துள்ளதோடு கனடாவிற்குள் நுழையும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது.