3.7 C
Scarborough

அமெரிக்காவில் கைதாகும் கனடியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Must read

 அமெரிக்காவில் கைது செய்யப்படும் கனடியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் (ICE) கைது செய்யப்படும் அல்லது தடுப்புக் காவலில் வைக்கும் கனடியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக புதிய அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

2025 ஜனவரி மாதத்தின் பின்னர் மட்டும் 200-க்கும் அதிகமான கனடியர்கள் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் காவலில் இருந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 137 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. , 2023 செப்டம்பர் முதல் 2025 அக்டோபர் நடுப்பகுதி வரை 434 முறை கனடியர்கள் அமெரிக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு வழக்குகள் தீவிர குற்றங்களுடன் தொடர்புடையவை; ஆறு பேருக்கு பிற குற்றச்சாட்டுகள் இருந்தன.

பெரும்பாலானவர்கள் — 366 பேர் — எந்தவிதமான தீவிர குற்றப் பதிவும் இல்லாதவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு, குற்றச்செயல்கள் அதிகரித்ததன் விளைவு அல்ல; மாறாக அமலாக்கத்தில் ஏற்பட்ட அடிப்படை மாற்றமே காரணம் என குயின்ஸ் பல்கலைக்கழக சட்ட பீடப் பேராசிரியர் ஷாரி ஐக்கன் தெரிவித்துள்ளார்.

வன்முறை குற்றங்கள் செய்தவர்களைப் பற்றி நாம் பேசவில்லை. மிகச் சிறிய சட்ட மீறல்களே இப்போது அமெரிக்க அமலாக்க அமைப்புகளின் கவனத்திற்கு வர காரணமாகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

canadamirror

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article