அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை இரத்துச் செய்யப்படவிருப்பதால், முன்கூட்டிய பிறப்புகளுக்கான சிகிச்சை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு பிறகு, பெற்றோரில் ஒருவர் அமெரிக்கக் குடிமகனாக இல்லாவிட்டாலும், பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க பிறப்புரிமை குடியுரிமை வழங்கப்படாது என்று ட்ரம்ப் அறிவித்தார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிறப்புரிமை குடியுரிமை சட்டத் திருத்தப்படி, வருகிற பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு பிறகு அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படாது என்ற அறிவிப்பால், அமெரிக்காவில் வாழும் பலரும் முன்கூட்டிய பிரசவத்துக்கு முயல்கின்றனர்.
இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுவதாவது, “முன்கூட்டிய பிரசவத்துக்காக, மருந்துகள் மூலம் செயற்கை வலி உண்டாக்கப்படுகிறது. ஒருவேளை செயற்கை வலி ஏற்படவில்லையென்றால், சிசேரியன் சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிசேரியன் சிகிச்சையின்போது, தாயின் உடலில் பெரிய கீறல்கள் ஏற்படும். கீறல்களினால் அதிகளவிலான குருதிப்போக்கு ஏற்படுவதுடன் தாயின் எதிர்கால கர்ப்பங்களையும் சிக்கலாக்கும்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் முன்கூட்டிய பிரசவமுறைமை