அமெரிக்காவின் வலிமையை மீட்டுள்ளேன் என்றும் 8 போர்களை நிறுத்தி உள்ளேன் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில் கூறியதாவது: பதினொரு மாதங்களுக்கு முன்பு நான் அதிபராக பொறுப்பேற்றபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி இருந்தது. விலைவாசி உச்சத்தில் இருந்தது. மொத்தத்தில் குழப்பமான நிலை இருந்தது. அதை சரிசெய்து வருகிறேன். அமெரிக்காவின் வலிமையை மீட்டிருக்கிறேன். 10 மாதங்களில் 8 போர்களை நிறுத்தி உள்ளேன்.

