கனடா மத்திய வங்கி கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் அதன் கொள்கை விகிதத்தை மாறாது பேணும் நோக்குடன் இம்முறை எதுவித குறைப்புகளும் இன்றி 2.75 சதவீத கணிப்பில் நிலையாக வைத்துள்ளது. அமெரிக்காவின் நிலையற்ற வர்த்தக கொள்கைகளால் மாறும் கட்டணங்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கனேடிய மத்தியவங்கி ஆளுநர் டிப் மெக்லம் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தைப் போலவே மத்திய வங்கி ஓர் குறைப்பை கணித்திருந்ததாக கூறும் மெக்லம் அமெரிக்க கொள்கைகள் காரணமாக ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக அது சாத்தியமற்றதாகி போனதாக கூறினார். எதிர் காலத்தில் இக்கட்டணங்கள் குறைக்கப்படுமா அல்லது அதிகரிக்கப்படுமா என்பது குறித்து தற்போது தெளிவாக கூற முடியாது என்றும் அவர் விளக்கினார்.
கட்டணங்களும் அச்சுறுத்தல்களும் விரைவாக முடிவுக்கு வந்து பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை வரலாம் ஆனாலும் குறைந்த பாதிப்புடன் மீளலாம். நுகர்வோர் காபன் விலையை நீக்கியதன் விளைவாக மத்திய வங்கி இரண்டு சதவீதம் என்ற இலக்கை நோக்கி மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவை ஒரு வருட காலத்திற்கு பொருளாதார மந்தநிலைக்குள் வைத்திருக்கும் ஒரு நீடித்த உலகளாவிய வர்த்தகப் போரை கனடா கற்பனை செய்கிறது இதன் விளைவாக கனேடிய பொருளாதாரத்திற்கு ஓர் அதிர்ச்சி இருக்கும் என்று மெக்லம் கூறினார்.
கனடாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளுக்கு சராசரியாக 1.2 சதவீதம் சரிவை காணவுள்ளது. அத்துடன் அமெரிக்க கட்டணங்கள் கனடாவின் உற்பத்தி மற்றும் வாழ்க்கைத் தரத்தையும் நிரந்தரமாகக் குறைக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆரம்பகால கட்டணங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்கனவே கனடாவில் வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையைப் பாதித்துள்ளன சில உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களை பணிநீக்கமும் செய்துள்ளனர்.
இதற்கிடையில், எரிவாயு விலைகள் வீழ்ச்சியடைந்து வருவதாலும், வர்த்தகப் போருக்கு மத்தியில் அமெரிக்காவிற்கான பயணத் தேவை பலவீனமடைந்ததாலும் மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜூன் 4 ஆம் திகதி நடைபெறும் அதன் அடுத்த கூட்டத்தில் கனேடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதை மீண்டும் தொடங்கும் என்று பலராலும் நம்பப்படுகின்றது.